Monday, 28 November 2011

கணினியிலிருந்து iphone மற்றும் ipod இற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்ய


                                    கணினியிலிருந்து iphone மற்றும் ipoad கோப்புகளை பரிமாற்றம் செய்யது கொள்ள iTunes என்னும் மென்பொருள் பயன்படுத்தி வருகிறோம். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே ஐபோன் மற்றும் ஐபேடிற்கு ஆடியோ மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை. இவ்வாறு ஐபோன் மற்றும் ஐபேடிற்கு கணினியில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள சந்தையில் நிறைய இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த வகையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் PC iPod என்னும் மென்பொருள் ஆகும் . இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியிலிருந்து ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க  DOWNLOAD 
                                                
                                                மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய ஐபோனையோ அல்லது ஐபேடினையோ கணினியுடன் இணைக்கவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் அந்த அப்ளிகேஷன் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோனினை வரிசைப்படுத்தும். அதை தேர்வு செய்து கொண்டு பாடல் மற்றும் வீடியோவினை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் .Net Framework 2.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். iTunes 8.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7(32பிட், 62பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.
Read more »
More than a Blog Aggregator