Wednesday 31 August 2011

bruce lee




                         1950 களில் ஹாங் ஹாங் நகர் வாழ்ந்து வளர கடுமையான சூழலை கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்து தப்ப ஆயிரக்கணக்கான சீனர்கள் ஹாங் ஹாங் இனுள் வெள்ளமென வந்தனர். அதனால் மக்கள் நெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது. தங்களையும் தங்களது எல்லைகளையும் காத்துக்கொள்ள இளைஞர்கள் கூட்டம் சேர்த்துக் கொண்டார்கள். அதில் இளைஞன் புறூஸ்லீயும் விதிவிலக்கல்ல.

தன் குருவுடன் லீ 

                                  கிட்டத்தட்ட ஓரளவு வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்த லீ அடிக்கடி இந்த கும்பலில் சண்டைகளில் ஈடுபடுவார்;. அதில் லீ தன்மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்பினார். அதனால் மொட்டைமாடிச் சண்டைகளான ஹங்சா சண்டைகள் நிறைய நடந்தது. அதில் அவரும் பங்கெடுத்தார். ஒரு முறை பலமாகத்தாக்கப்பட்டார். அதன்பின்பே உண்மையான நெருக்கடி நிலைமைகளில் பயன்படத்த வேண்டி தற்காப்பு கலையை கற்க ஆரம்பித்தார். வேங்சன் முறையை கற்றுக்கொள்வதில் தொடங்கினார். 18 வதிலேயே சூரப்புலியானார். அவர் ஹாங் ஹாங் கிலேயே சாசா நடனக்கலையில் சிறந்தவர். அவர் சகோதரர் வாள் சண்டை வீரராக இருந்தார். அதனால் அதைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். இதனால் எல்லா வித்தைகளிலும் சகலகலா வல்லவரானார்.

மனைவி பிள்ளையுடன் லீ

                       பின்னர் 1959 இல் சியாற்றிலுக்கு வந்தார். வந்ததும் ஒரு தகுதியுள்ள ஆசிரியராக இருந்தார். சாக்சபோனா ஒரு தகுதியுள்ள லீயின் முதல் மாணவன் மற்றும் நண்பர்களில் ஒருவர். அவரிடம் பயின்ற முதலிடை மாணவர்களில் ஒருவரே பின்னாளில் அவரது மனைவியாகிய லிண்டா. அவரது வகுப்பறைகளில் மின் விளக்குள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். அவரது வகுப்பில் 10 அல்லது 12 மாணவர்களே இருப்பார்கள். 1966 இல் லீ தம்பதியினர் கிறீன் கார்நெற்இல் நடிப்பதற்காக லொஸ்ஏஞ்சலுக்கு குடிபெயர்ந்தனர். அங்கும் ஒரு ஜிம் தொடங்கினார். தனிப்பட்ட முறயில் பயிற்சி அளித்தார்.


                       அந்தக்கால கட்டத்தில்தான் அவர் பல்வேறுபட்ட யுத்தமுறைகளை கலந்து தனது சொந்த முறையானஜீகும்டோவை உருவாக்கினார். அதற்குக்காரணம் சம்பிரதாய தற்காப்புக்கலையில் இருந்த எல்லைகளை அவர் விரும்பவில்லை. உதாரணமா கராத்தே போட்டிக்களத்தில் இறங்கிசண்டை போடமுடியாதுயூடோ பயிற்சி எடுத்தால் குத்தவோ உதைக்கவோ முடியாது. குங்பூ செய்தால் ஒர விதமாக நின்று அசைவுகளைக் கவனித்து ஒரு விதமாகத் தாக்கணும் இது நடைமுறைக்கு ஒத்து வராது காரணம் ஒரு சண்டையில் எதுவானாலும் நிகழலாம். சண்டைகளுக்கு விதிகளே கிடையாது. தாக்க வருபவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. என நினைத்தார் அதனால் எதற்கும் தயாராக இருக்கும் வகையில்ஜீகும்டோவை உருவாக்கினார் அதனால் அது புரட்சிகரமான சிந்தனையாக இருந்தது.


நெஞ்சாக்குடன் லீ

                             இந்தஜீகும்டோவினது சிறப்பானது எளிமை விவேகம் சிக்கனம் முடிந்தவரை நேருக்கு நேர் தாக்குவது தப்பிக்கவும் முடியும் அதே நேரத்தில் தாக்கவும் முடியும் என்பதுடன் சேர்த்துக்கொண்டே போவதைவிட குறைத்துக்கொண்டு வரணும் என்று நினைத்து வடிவமைத்தார்.லீ உலகெங்கும் தற்காப்புக்கலையை அறிமுகப் படுத்தியது மட்டுமன்றிஜீகும்டோவை அறிமுகப்படத்தியது மட்டுமன்றி இன்னொன்றையும் அறிமுகப்படுத்தினார். அதுதான்நெஞ்சாக்அந்த சிறிய ஆசிய ஆயுதத்தை செய்ததின் முலம் உலககிற்கே ஒரு வியப்பை அளித்தார். அதை அவர் சுற்றிக்காட்டியதும் அனைவரும் வியந்தனர். அதற்கான பயிற்சியை ஆயிரக்கணக்கான மணிநேரம் செய்தார்.


                1967 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு கராத்தே போட்டியின்போது லீ செய்து காட்டிய ஒரு அங்குலக்குத்து (one inge pangh) அதுவரையும் யாரும் செய்திருக்கவில்லை. எல்லோரும் வியப்பின் உச்சிக்கு சென்றனர். பின்பு ஒரு கையின் இரண்டு விரல்களினால் ரிப்ஸ் அடித்துக்காட்டினார். அவரது பயிற்சிகளின் வலிமையை உலகிற்கு உணர்த்தினார். அந்த போட்டியின்போது தான்நின்ற இடத்திலிருந்து 5அடி தூரத்திலிருந்த எதிராளியை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி தான்நின்ற இடத்திற்கு வருவார். எதிராளியும் தான் தயாராகவில்லை என்று கூறுவார் பின்னர் தயாரானதும் மீண்டும் அதேபோல் செய்வார். இது நமக்கு சரிவராது என்று கூறிவிட்டு எதிராளி செல்வார். அந்த வீடியோவை காற் பங்கு வேகத்தில் பார்த்தபோது கூட அது மிக வேகமாகவே இருந்தது. ஒளிப்படக்கருவியால் கூட படம்பிடிக்க முடியவில்லை. இதன்மூலம் தனது வேகத்தை உலகிற்கு உணர்த்தினார்.


இரண்டு விரல்களில் புசப் 

              1971 ஆம் ஆண்டு ஒரு பேட்டியின்போதுதண்ணீரை ஒரு போத்தலினுள் விட்டதும் அது போத்தலில் வடிவம் பெறும். தேனீர் கோப்பையில் விட்டால் அதன்வடிவம் பெறும். தண்ணீர் தொடர்ச்சினானது. தண்ணீர் தெறிக்கும். எனவே தண்ணீராய் இரு தோழாஎன்று கூறினார். இந்த வசனத்தை படத்திலும் பிரயோகித்தார். தனது புத்தகமான TAO OF TEEJ இல் தனது குறிக்கோள்களில் தானாகவே இருக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.


Read more »

Sunday 28 August 2011

திரைப்படங்களை,மென்பொருட்களை இலகுவாக தரவிறக்கம் செய்ய

                            
                                 நீங்கள் utorrent உபயோகித் திருப்பீர்கள் அதற்கு மாற்றான ஒரு software தான் இந்த BitComet ஆனால் utorrent இல் இல்லாத பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியதுதான் BitComet


                              utorrent முலம் தரவிறக்கம் பண்ணும் அனைத்தையும் இதன்மூலம் பண்ணமுடியும். இதில் user id  ஒன்றை create  செய்து உள் நுழைந்தால் அதிலேயே search செய்து தரவிறக்கிக் கொள்ளலாம். சில torrent தளங்களில் படங்களின் snapshots  கொடுத்திருப்பார்கள். ஆனால் அனேகமான தளங்களில் snapshots போடப்பட்டிருக்காது அப்படியாயின் படத்தின் தரத்தை எப்படி அறிவது. அதற்கு உதவும் இம்மென்பொருள். இதிலிருக்கும் snapshots என்னும் options இல் அதன் தரத்தைப் பார்த்து தரம் குறைவாக இருந்தால் நீக்கிவிட்டு வேறு படத்தை தரவிறக்கலாம். இதனால் நேரவிரயம் மிச்சமாகும். மற்றும் தரவிறக்கும் போதே அதனை  play பண்ணிப் பார்க்கலாம்.


                                  மற்றும் இதிலுள்ள comments முலம் அப்படங்களின் தரம் மற்றும் மென்பொருள்களில் வைரஸ் ஏதாவது உள்ளதா என்றும் தரவிறக்கியவர்களின் கருத்துக்களை வைத்து முடிவுசெய்யக்கூடிவாறு இருக்கும். மேலும் தரவிறக்கும் மென்பொருள்கள் key அல்லது crake உடனேயேகாணப்படுகிறது.


இந்த மென்பொருளின் மேலும் சிறப்புகள்
  1. விட்ட இடத்திலிருந்து மீண்டும் download பண்ண முடியும்.
  2. தேவைக்கேற்ப தரவிறக்கத்தை நிறுத்தி வேறு இணையத் தேவைக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் தரவிறக்கலாம்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

    Read more »

    Saturday 27 August 2011

    Skype உரையாடல்களை ஒலி,ஒளிப்பதிவு செய்ய


                நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு


                                    powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skypeon செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார் நிலைக்கு வந்துவிட்டது.


                 உங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான  fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் 

    தரவிறக்க 

    DOWNLOAD

       இதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்

    01.
    Evaer Video Recorder For Skype
    02. MX Skype Recorder
    03. richy

     தவறாது கருத்துக்களையும் பதியுங்கள்
    Read more »

    Friday 26 August 2011

    முப்பரிமாண சித்திரங்கள்...

                           
                    அனேகமாக பார்க்கும் சித்திரங்கள் இருபரிமாணங்களைக் கொண்டவையாகவே இருக்கிறது. ஆனால் இப்பொழுது முப்பரிமாண சித்திரங்கள் பிரபல்யம் அடையத் தொடங்கி விட்டன. சித்திரம் வரைபவர்கள் இப்பொழுது முப்பரிமாணச் சித்திரங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அனேகமாக வீதிகளில் வரையப்படும் இத் தத்ரூபமான சித்திரங்கள் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக சில சித்திரங்களை இங்கே தந்துள்ளேன். யான் பெற்றஇன்பம் பெறுக இவ்வையகம்.  

















    Read more »

    Thursday 25 August 2011

    உங்கள் குரலை சிறப்பாக ஒலிப்பதிவு செய்ய




                
                                                      WavePad Sound Editor இந்த மென்பொருளைக் கொண்டு மிக அழகாக ஒலிப்பதிவை செய்யலாம். மற்றும் இவ் மென்பொருளானது மிக மிக குறைந்த அளவைக்கொண்டது. ஆக 653KB ஒலிப்பதிவு செய்த ஒலியில் உள்ள noise ஐ தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம். Ecco செய்து கொள்ளலாம். மற்;றும் கையாள்வதற்கு மிக இலகுவாக இருக்கிறது. 



                             இதில் முக்கியமானது பழையபாடல்கள் அல்லது புதியபாடல்களில் ஒலி குறைவான பாடல்களை இதில் வைத்து ஒலியை அதிகரித்துக் கொள்ளலாம் அதுவும் அதிலேயே கேட்டுப்பார்த்து சரியான அளவை தெரிவு செய்யலாம். எவ்வளவு ஒலியை கூட்டினாலும் அலறல் இல்லாமல் துல்லியமாக அதிகரிப்பது இதன் சிறப்பம்சமாகும். ஒலியை சீராக அதிகரிக்கச் செய்ய அல்லது சீராக குறையச்செய்ய என ஏராளமான பல விடயங்களை உள்ளடக்கிய மிகச்சிறிய மென்பொருளாகும். பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குங்கள்.
    Read more »

    பென்டிரைவ் ( Pen drive)




               பென்டிரைவ் என்பது இப்பொழுது கணிணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும்.
    இதன் மூலம் நமக்கு தேவையான File -களை அல்லது புகைப்படங்களை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
    இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணிணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் (Software)  கீழே தரப்பட்டுள்ளன.
    1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள  File -களை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த  File -களை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
    இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
    2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணிணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.
    ஏதேனும் வைரஸ் உங்கள் கணிணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
    3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf  File -களை  முற்றிலுமாக தடைசெய்கிறது.
    உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான Short cut தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
    4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான  File -களை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.
    Read more »
    More than a Blog Aggregator