Wednesday 28 September 2011

கைபேசியில் இருந்து உலகின் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக SMS அனுப்ப




இன்றைய கால கட்டத்தில் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது . சமீப காலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .


பாமரர் முதல் பணக்காரர் வரை எந்த தகவலுக்கும் உடனடியாக அவர்கள் அனுப்புவது SMS ஆகும் . ஏனென்றால் குறுஞ்செய்தி அனுப்புவது அவ்வளவு சுலபமாகும் . உலகின் எந்த பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள குறுஞ்செய்தி இந்த மொபைல் மென்பொருளை கொண்டு அனுப்ப முடியும்.

மேலும் அளவற்ற மின்னஞ்சல்களை இந்த மென்பொருளை கொண்டு பகிர்ந்து கொள்ள முடியும் . அளவற்ற்ற அரட்டையையும் மேற்கொள்ள முடியும் . இந்த மென்பொருளை கொண்டு அதிவேகமாகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்தில் அனுப்பமுடியும் .

இதற்கு தேவை ஜாவா சப்போர்ட் செய்யும் ஒரு மொபைலும் இன்டர்நெட் இணைப்புடன் இருக்க வேண்டும் . இந்த மென்பொருளானது ஜாவா மற்றும் android மொபைல்களிலும் வேலை செய்யும் .

DOWNLOAD JAVA

DOWNLOAD ANDROID




கொசுறுத்தகவல் : உலகின் எந்த பகுதிக்கும் SMS அனுப்ப இலவசமாக வெப்சைட் ஒன்று உள்ளது அந்த தளத்திற்கு செல்லவும் 160 எழுத்துகள் கொண்ட எஸ்எம்எஸ் அனுப்பலாம் இதில்  முக்கியமானது REGISTER செய்ய தேவை இல்லை .

தளத்திற்கு செல்ல


Read more »

Monday 26 September 2011

Driver CD தொலைந்தால் BACK UP எடுத்துக்கொள்ள.


                         விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால் இதற்கு  எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும்  அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி மென்பொருள் ஒன்றினை தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளவும்


பின்னர் அதனைத் திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்.

 
இதில் Scan Current System ” என்ற Button ஐ கிளிக் செய்யவும். இப்போ அதில் நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து  Driver மென்பொருள்களும் நமக்கு தென்படும். இதில் எதெல்லாம் நமக்கு தேவையோ அத்தனையையும் தேர்வுசெய்து Backup now “ என்ற Button அழுத்தி நீங்கள் விரும்பும் பகுதியில் BACK UP செய்த Driver மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். அதில் எல்லா Driver களுக்குமாக ஒரே ஒரு setup file மட்டுமே காணப்பபடும். பின்னர் அதனை விண்டோஸ் இயங்குதள நிறுவுகையின் பின்னர் நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.
Read more »

Saturday 24 September 2011

ஈமெயில் ஐடியை பாதுகாக்க




                                       இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

1. உங்களுடைய  மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும். 
 
2. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும்.  அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.

5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள். 

எனக்கு தெரிந்தவற்றை மட்டும் தான் இங்கு சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதாவது இதை பற்றி தெரிந்தால் சொல்லலாம்.
 

Read more »

Monday 19 September 2011

Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?


                          விளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.

யாகூ மெயிலில் 500 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம். ஒரு முறை சேர்த்துவிட்டால் போதும், அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் நீங்கள் படிப்பதற்கு முன்பாக எல்லாம் தானாகவே அழிந்து விடும்.

Blocked senders எனப்படும் வரிசையில் தேவையில்லாத மின்னஞ்சல் முக்வரிகளை சேர்த்து விடலாம். விருப்பமில்லாத மின்னஞ்சல்களைப் பெற்று பின்னர் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு யாகூ மெயிலே அழித்துவிடும்.எப்படி என்று பார்ப்போம்.

1.உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஒரத்தில் உள்ள Options -> More options… செல்லவும்.



2.இடதுபக்கம் வரும் மெனுவில் Spam என்பதை கிளிக் செய்யவும். வலது பக்கமுள்ள Blocked Email addresses பகுதியில் உங்களுக்கு வேண்டிய
மின்னஞ்சல்களை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சேர்க்க சேர்க்க அவர்களின் பெயர்கள் கீழே தெரியும்.



3.கடைசியாக மேலெ உள்ள Save changes என்பதை கிளிக் செய்தால் உங்களின் விருப்பம் சேமிக்கப்படும்.


இனிமேலும் உங்களை தொந்தரவு செய்யும் மின்னஞ்சல்களை நீங்கள்
பார்வையிடப்போவதில்லை
Read more »

Saturday 10 September 2011

Internet History தகவல்களை Delete செய்ய



                         பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History, Temporary  Files, Cookies என்ற முறையில்  நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய  Passwords, confidential Informations  கூட நம்முடைய  கணிணினியில்  பதிவாகி   சில சமயம்  மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு  Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய  எளிதாக இருக்கும், நாம் பல   Browsers  (Google chrome, Firefox, opera, IE)  பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை   Delete  செய்ய ஒரு வசதி உள்ளது.

install செய்தவுடன் Run செய்தால் கீழே உள்ளது போல் விண்டோ வரும்.


இதில் ஒவ்வொரு Tabs கிளிக் செய்து ( Internet Items, Windows items, Applications…) Clean Now  தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.  நீங்கள் நிறைய  Browsers பயன்படுத்தினாலும் இந்த முறையில் எளிதாக உங்க தகவல்களை Delete செய்து கொள்ளலாம்.

தரவிறக்க : DOWNLOAD
Read more »

Friday 9 September 2011

தற்காலிக (trial) மென்பொருட்களை நிரந்தரமாக உபயோகிக்க.



                                           ஒரு தற்காலிக மென்பொருள் என்பது அனேகமாக  முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும். இது நமக்கு அறிந்த ஒன்றே. அது நமது கணிணியில் உள்ள நேரம் திகதியை வைத்தே அதனை தீா்மானித்துக் கொள்கிறது. அனேகமானவா்கள் தமது கணிணியின் நேரம் திகதி என்பவற்றை மாற்றி இதனை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வார்கள்

                                            இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது. இந்த மென்பொருளை வைத்து நீங்கள் நிறுவிய (install)  மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து இந்த மென்பொருளை காலவதியாகிய (expire) மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள். இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

                                                    இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை (file) கண்டு பிடிக்கவும். அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில் (desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை (shortcut icon) உருவாக்கவும். இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.

தரவிறக்க : DOWNLOAD

கருத்துக்களை பதிவிட மறக்காதீா்கள்.
Read more »

Tuesday 6 September 2011

நீங்கள் கணிணியில் செய்பவற்றை வீடியோவாக பதிவு செய்ய



கணிணியில் Screenshot எடுப்பதற்கு பல மென்பொருள்கள் உண்டு. மேலும் கணினியில் உள்ள Print Screen வசதி மூலமும் Screenshot எடுக்கலாம்.ஆனால் இதன் மூலம் உங்கள் கணிணியில் உங்கள் நடவடிக்கைகளை வீடியோவாக மாற்ற இயலாது.புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும். நீங்கள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவுவதை முழுமையாக ஒரு வீடியோவாக பதிவு செய்ய விரும்பினால் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.இதோடு உங்கள் குரலையும் அதாவது வீடியோவாக பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யலாம்.


இந்த மென்பொருளை நிறுவிய பின் அதில் உள்ள Record சிவப்பு பட்டனை அழுத்தினால் அதிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய ஆரம்பித்து விடும். உங்கள் தேவையான போது Stop பட்டனை அழுத்தி நிறுத்தி விட்டு வீடியோவாக Save செய்து கொள்ளலாம். நடவடிக்கைகளை பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதை வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளலாம். தேவையில்லையென்றால் வெறும் வீடியோ மட்டும் கூட பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் பல வசதிகள் உண்டு. நீங்கள் உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதி அல்லது முழு திரை வடிவில் கூட Record செய்யலாம். இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள். பயன்படுத்தி பாருங்கள்.

இந்த மென்பொருளை  தரவிறக்க


மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 
Read more »

Monday 5 September 2011

மிக வேகமாக windows xp ஐ install பண்ண




நீங்கள் அனைவரும் windows xp install பண்ணியிருப்பீர்கள். அதற்கு குறைந்தது 40 நிமிடங்களாவது ஆகும். இதனை நான் சொல்லப் போகும் முறையில் செய்வதானால் 15 நிமிடங்களை மீதப்படுத்தலாம். இந்த எளிய தந்திரங்கள் மூலம் அதனை இலகுவாக செய்யலாம். 

01.Xp cd யை இட்டு கணிணியை மீண்டும் தொடக்கவும்.

02.select the partition (பாட்டிசனை தெரிவு செய்யவும்)
 
03.பாட்டிசனை போமற் செய்து installation செய்யவும்.

04.installation செய்து முடிந்ததும் கணிணி restart ஆக தொடங்கும்
 
05.இனி 40 நிமிடங்கள் ஆகும் ஆனால் இப்போதுதான் உங்களது வேலை கணிணி restart ஆக தொடங்கும் சமயத்தில் உடனே SHIFT + F10 Key    அழுத்துங்கள்.
 
06.தோன்றும் command prompt இல் “Taskmgr” என்று type பண்ணுங்கள் திறக்கும்  Task Manager இல் 

07.Setup.exe -> Right Click on Setup.exe -> Set Priority -> Select High or Above Normal
என்று வழங்கிவிட்டு பாருங்கள் 

மிகவேகமாக installation செய்து முடிக்கப்படும். பின்னூட்டங்களை மறக்காதீர்கள் நண்பர்களே...


Read more »

Sunday 4 September 2011

Rapidshare, Megaupload போன்ற தளங்களில் நேரம் ஓடுவதை தவிர்ப்பது எப்படி?



                             நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare, Ziddu, Mediafire.... போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுபதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம். ஒரே நேரத்தில் இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது. இது போன்ற நிலையில் நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது. சரி இதிலிருந்து தப்பித்து எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!


                            இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது. இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம். rapidshare, megaupload, Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில் Rapidshare, Megaupload இணைப்பை (link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால் அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும். மேலும் இந்த மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.

மென்பொருளை தரவிறக்க 
Read more »
More than a Blog Aggregator