Wednesday, 21 December 2011

தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே shut down ஆக




இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது ஒரு தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள். பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது, பயர்பொக்சின் இயல்பான தரவிறக்க வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப்பிடிக்காது. பயர்பொக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.

இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்துவிடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம். இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பொக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG. இந்த நீட்சியின் மூலம் பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர்(Firefox Download manager) விண்டோவின் அடியில் கணணியை அணைப்பதற்கான(Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும்.

இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும். உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது.
கணணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம். எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணணியை அணைத்து விடும்.

தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் கணணியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணணி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும்.

தரவிறக்க    DOWNLOAD
Read more »

Saturday, 10 December 2011

youtube'ல் திரைப்படம் பார்க்க



காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம் எடுத்த விடியோவை  அப்லோட் செய்து எமது நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். இப்பொழுது  இந்த தளத்தில்  400க்கும் அதிகமான திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் , தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைய பல திரைப்படங்களை YouTube ல் ஓட்டும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த லின்க்குகளை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.


Read more »

Friday, 9 December 2011

MP3 பாடல்களில் தரத்தை உயர்த்த


                                 நாம் சாதரணமாகவே பாடல்களை கேட்டும் போது அதனுடைய தரத்தை கண்டுபிடிக்க முடியும். MP3 பாடல்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒன்று அதிகஅளவுடைய பைல் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். மற்றொன்று அதனுடைய அளவு குறைவாகவும் பாடல்களின் தரம் குறைவாக இருக்கும். பாடல்களில் அளவினை வைத்தே அதனுடைய தரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய பாடல்களே சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குறைவாக அளவுடைய பாடல்களை வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். குறிப்பாக செல்போன்களில் பாடல்களை வைத்திருப்பவர்கள் குறைவான அளவுடைய பாடல்களையே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுபோன்றவர்களுக்கும் சிறிய அளவுடைய பாடலை பெரிய அளவாக்க நினைப்பவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாகும்.

 
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு பேர்ட்டபிள் மென்பொருள் ஆகும். பின் பாடலை தேர்வு செய்யவும். மொத்தமாகவும் ட்ராக் அண்ட் ட்ராப் செய்து கொள்ளவும் முடியும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து விட்டு இறுதியாக Process என்னும் பொத்தானை அழுத்தவும்.


மென்பொருளை தரவிறக்க : DOWNLOAD
Read more »

Tuesday, 6 December 2011

USB Drives களை பார்மெட் செய்ய மென்பொருள்


                          நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.


Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். FAT32 and NTFS format களை உடையது ஆகும்.
 
மென்பொருளை பதிவிறக்க: DOWNLOAD

எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.
 
முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும். பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்துகொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.
 
 
 அடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.
 
 
 பார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.


 விரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம். அவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்.
Read more »

Friday, 2 December 2011

ஆடியோ பைலைவேறு ஆடியோ பார்மெட்டிற்கு மாற்ற

                                      
                  ஆடியோ பைல்கள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது mp3, mp4 பைல் பார்மெட்கள் மட்டுமே ஆகும். இன்னும் இதுதவிர பல்வேறு ஆடியோ பைல் பார்மெட்கள் உள்ளன. அவை MP3, AAC, WAV, WMA, CDA, FLAC, M4A, MID, MKA, MP2, MPA, MPC, APE, OFR, OGG, RA, WV, TTA, AC3, DTS இது போன்று இன்னும் பல்வேறு பைல் பார்மெட்கள் உள்ளன. இவையாவும் தனித்தனி ஒலி அமைப்புகளில் செயல்படக்கூடியது ஆகும். நாம் ஏன் ஒரே பைல் பார்மெட்டில் வைத்திருந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், இவ்வாறு மாற்றுவதால் என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு சந்தேகம் எழக்கூடும். நம்முடைய கணினியில் அனைத்து விதமான ஆடியோ பைல்ககளையும் நம்மால் கேட்க முடியும். ஆனால் ஐபேட், மொபைல்போன்களில் இதுபோன்ற வசதிகள் குறைவும் ஒரு சில குறிப்பிட்ட  ஆடியோ பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்யும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அனைத்து விதமான ஆடியோ பைல்களையும் கேட்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க நாம் வேண்டிய ஆடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
 

 இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add என்னும் சுட்டியை அழுத்தி ஆடியோ பைல்களை உள்ளினைத்து கொள்ளவும். பின் Output என்ற இடத்தில் விருப்பமான ஆடியோ பைல் பார்மெட்டினை தேர்வு செய்யவும். இந்த மென்பொருள் மூலம் கன்வெர்ட் செய்யக்கூடிய ஆடியோ பைல் பார்மெட்கள் AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA ஆகியவை ஆகும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


 
இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும். குறிப்பிட்ட ஆடியோ பைலில் இருந்து வேண்டிய பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும் முடியும். இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை எளிமையாக வெட்ட முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.


தரவிறக்க DOWNLOAD
Read more »
More than a Blog Aggregator