Wednesday 31 August 2011

bruce lee




                         1950 களில் ஹாங் ஹாங் நகர் வாழ்ந்து வளர கடுமையான சூழலை கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்து தப்ப ஆயிரக்கணக்கான சீனர்கள் ஹாங் ஹாங் இனுள் வெள்ளமென வந்தனர். அதனால் மக்கள் நெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது. தங்களையும் தங்களது எல்லைகளையும் காத்துக்கொள்ள இளைஞர்கள் கூட்டம் சேர்த்துக் கொண்டார்கள். அதில் இளைஞன் புறூஸ்லீயும் விதிவிலக்கல்ல.

தன் குருவுடன் லீ 

                                  கிட்டத்தட்ட ஓரளவு வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்த லீ அடிக்கடி இந்த கும்பலில் சண்டைகளில் ஈடுபடுவார்;. அதில் லீ தன்மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்பினார். அதனால் மொட்டைமாடிச் சண்டைகளான ஹங்சா சண்டைகள் நிறைய நடந்தது. அதில் அவரும் பங்கெடுத்தார். ஒரு முறை பலமாகத்தாக்கப்பட்டார். அதன்பின்பே உண்மையான நெருக்கடி நிலைமைகளில் பயன்படத்த வேண்டி தற்காப்பு கலையை கற்க ஆரம்பித்தார். வேங்சன் முறையை கற்றுக்கொள்வதில் தொடங்கினார். 18 வதிலேயே சூரப்புலியானார். அவர் ஹாங் ஹாங் கிலேயே சாசா நடனக்கலையில் சிறந்தவர். அவர் சகோதரர் வாள் சண்டை வீரராக இருந்தார். அதனால் அதைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். இதனால் எல்லா வித்தைகளிலும் சகலகலா வல்லவரானார்.

மனைவி பிள்ளையுடன் லீ

                       பின்னர் 1959 இல் சியாற்றிலுக்கு வந்தார். வந்ததும் ஒரு தகுதியுள்ள ஆசிரியராக இருந்தார். சாக்சபோனா ஒரு தகுதியுள்ள லீயின் முதல் மாணவன் மற்றும் நண்பர்களில் ஒருவர். அவரிடம் பயின்ற முதலிடை மாணவர்களில் ஒருவரே பின்னாளில் அவரது மனைவியாகிய லிண்டா. அவரது வகுப்பறைகளில் மின் விளக்குள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். அவரது வகுப்பில் 10 அல்லது 12 மாணவர்களே இருப்பார்கள். 1966 இல் லீ தம்பதியினர் கிறீன் கார்நெற்இல் நடிப்பதற்காக லொஸ்ஏஞ்சலுக்கு குடிபெயர்ந்தனர். அங்கும் ஒரு ஜிம் தொடங்கினார். தனிப்பட்ட முறயில் பயிற்சி அளித்தார்.


                       அந்தக்கால கட்டத்தில்தான் அவர் பல்வேறுபட்ட யுத்தமுறைகளை கலந்து தனது சொந்த முறையானஜீகும்டோவை உருவாக்கினார். அதற்குக்காரணம் சம்பிரதாய தற்காப்புக்கலையில் இருந்த எல்லைகளை அவர் விரும்பவில்லை. உதாரணமா கராத்தே போட்டிக்களத்தில் இறங்கிசண்டை போடமுடியாதுயூடோ பயிற்சி எடுத்தால் குத்தவோ உதைக்கவோ முடியாது. குங்பூ செய்தால் ஒர விதமாக நின்று அசைவுகளைக் கவனித்து ஒரு விதமாகத் தாக்கணும் இது நடைமுறைக்கு ஒத்து வராது காரணம் ஒரு சண்டையில் எதுவானாலும் நிகழலாம். சண்டைகளுக்கு விதிகளே கிடையாது. தாக்க வருபவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. என நினைத்தார் அதனால் எதற்கும் தயாராக இருக்கும் வகையில்ஜீகும்டோவை உருவாக்கினார் அதனால் அது புரட்சிகரமான சிந்தனையாக இருந்தது.


நெஞ்சாக்குடன் லீ

                             இந்தஜீகும்டோவினது சிறப்பானது எளிமை விவேகம் சிக்கனம் முடிந்தவரை நேருக்கு நேர் தாக்குவது தப்பிக்கவும் முடியும் அதே நேரத்தில் தாக்கவும் முடியும் என்பதுடன் சேர்த்துக்கொண்டே போவதைவிட குறைத்துக்கொண்டு வரணும் என்று நினைத்து வடிவமைத்தார்.லீ உலகெங்கும் தற்காப்புக்கலையை அறிமுகப் படுத்தியது மட்டுமன்றிஜீகும்டோவை அறிமுகப்படத்தியது மட்டுமன்றி இன்னொன்றையும் அறிமுகப்படுத்தினார். அதுதான்நெஞ்சாக்அந்த சிறிய ஆசிய ஆயுதத்தை செய்ததின் முலம் உலககிற்கே ஒரு வியப்பை அளித்தார். அதை அவர் சுற்றிக்காட்டியதும் அனைவரும் வியந்தனர். அதற்கான பயிற்சியை ஆயிரக்கணக்கான மணிநேரம் செய்தார்.


                1967 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு கராத்தே போட்டியின்போது லீ செய்து காட்டிய ஒரு அங்குலக்குத்து (one inge pangh) அதுவரையும் யாரும் செய்திருக்கவில்லை. எல்லோரும் வியப்பின் உச்சிக்கு சென்றனர். பின்பு ஒரு கையின் இரண்டு விரல்களினால் ரிப்ஸ் அடித்துக்காட்டினார். அவரது பயிற்சிகளின் வலிமையை உலகிற்கு உணர்த்தினார். அந்த போட்டியின்போது தான்நின்ற இடத்திலிருந்து 5அடி தூரத்திலிருந்த எதிராளியை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி தான்நின்ற இடத்திற்கு வருவார். எதிராளியும் தான் தயாராகவில்லை என்று கூறுவார் பின்னர் தயாரானதும் மீண்டும் அதேபோல் செய்வார். இது நமக்கு சரிவராது என்று கூறிவிட்டு எதிராளி செல்வார். அந்த வீடியோவை காற் பங்கு வேகத்தில் பார்த்தபோது கூட அது மிக வேகமாகவே இருந்தது. ஒளிப்படக்கருவியால் கூட படம்பிடிக்க முடியவில்லை. இதன்மூலம் தனது வேகத்தை உலகிற்கு உணர்த்தினார்.


இரண்டு விரல்களில் புசப் 

              1971 ஆம் ஆண்டு ஒரு பேட்டியின்போதுதண்ணீரை ஒரு போத்தலினுள் விட்டதும் அது போத்தலில் வடிவம் பெறும். தேனீர் கோப்பையில் விட்டால் அதன்வடிவம் பெறும். தண்ணீர் தொடர்ச்சினானது. தண்ணீர் தெறிக்கும். எனவே தண்ணீராய் இரு தோழாஎன்று கூறினார். இந்த வசனத்தை படத்திலும் பிரயோகித்தார். தனது புத்தகமான TAO OF TEEJ இல் தனது குறிக்கோள்களில் தானாகவே இருக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

More than a Blog Aggregator