பென்டிரைவ் என்பது இப்பொழுது கணிணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். 
இதன்  மூலம் நமக்கு தேவையான File -களை அல்லது புகைப்படங்களை சேமித்து கொண்டு  மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த  பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும்  பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணிணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம்  பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் (Software)  கீழே  தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள  File -களை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த  File -களை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
இதனால்  உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து  அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL: பென்டிரைவ்  உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில்  இருந்து கணிணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து  இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் பின்பக்கத்தில் வேலை  செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணிணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf  File -களை  முற்றிலுமாக தடைசெய்கிறது.
உங்கள்  பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு  முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான Short cut  தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான  File -களை சேமித்து  கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம்  நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.
 
 Blog RSS Feed
 Blog RSS Feed Via E-mail
 Via E-mail Twitter
 Twitter Facebook
 Facebook
 

 

 
 
good
ReplyDelete