கணிணியில் Screenshot எடுப்பதற்கு பல  மென்பொருள்கள் உண்டு. மேலும் கணினியில் உள்ள Print Screen வசதி மூலமும்  Screenshot எடுக்கலாம்.ஆனால் இதன் மூலம் உங்கள் கணிணியில் உங்கள்  நடவடிக்கைகளை வீடியோவாக மாற்ற இயலாது.புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும். நீங்கள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவுவதை முழுமையாக ஒரு வீடியோவாக பதிவு  செய்ய விரும்பினால் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.இதோடு உங்கள் குரலையும்  அதாவது வீடியோவாக பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதையும் பதிவு  செய்யலாம்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் அதில் உள்ள Record சிவப்பு  பட்டனை அழுத்தினால் அதிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய  ஆரம்பித்து விடும். உங்கள் தேவையான போது Stop பட்டனை அழுத்தி நிறுத்தி  விட்டு வீடியோவாக Save செய்து கொள்ளலாம். நடவடிக்கைகளை பதிவு செய்யும் போது  நீங்கள் பேசுவதை வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளலாம். தேவையில்லையென்றால்  வெறும் வீடியோ மட்டும் கூட பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் பல வசதிகள் உண்டு. நீங்கள் உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதி அல்லது முழு திரை வடிவில் கூட Record செய்யலாம். இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள். பயன்படுத்தி பாருங்கள்.
இந்த மென்பொருளை  தரவிறக்க
மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  
 
 Blog RSS Feed
 Blog RSS Feed Via E-mail
 Via E-mail Twitter
 Twitter Facebook
 Facebook
 
 

 
 
No comments:
Post a Comment